விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் ஆடு மேய்க்க சென்ற முதியவர் கண்மாய் நீரில் மூழ்கி பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தண்டு கவுண்டர் என்பவரின் மகன் பொம்மனகவுண்டர் (72), பொம்மனகவுண்டர் 25 ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார், இந்நிலையில் வழக்கம்போல் ஆடுகளை மேய்க்க சென்றவர், வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்த நிலையில், ஊரின் அருகே உள்ள கண்மாய் நீரில் பொம்மனகவுண்டர் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார்,பொம்மன கவுண்டரின் உடலை மீட்டு, எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
ஆடு மேய்க்க சென்ற முதியவர் கண்மாய் நீரில் மூழ்கி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீடு இடிந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
அடுத்த
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026