தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படந்தபுளி கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் முருகன் (61),இவர் கடந்த 27-08-2022 அன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு.சுவாமிநாதன் (23.04.2024) குற்றவாளி முருகனுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 10,000 அவதாரம் விதித்து தீர்ப்பு தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை திறன்பட செயல்பட்டு புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துகுமாரி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர்கள் திருமதி.சமுத்திரகனி மற்றும் திருமதி.சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
Vilathikulam
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 வருட கடுங்காவல் தண்டனை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு கடுங்காவல் தண்டனை!
அடுத்த
கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம்: வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026