விளாத்திகுளம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குச்செவல் கிராமத்தை சேர்ந்த துரைச்சாமிநாடார் என்பவரின் மகன் ராமச்சந்திரன் (62), இவர் பல ஆண்டுகளாக பனைத்தொழில் செய்து வந்துள்ளார், இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பனைமரத்தில் இருந்து கீழே விழுந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இதனை அடுத்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றிய சூரங்குடி காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.