விளாத்திகுளத்தில் தனிமையில் இருந்த முதியவர் விஷம் அருந்தி தற்கொலை.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம்  கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தர்மராஜ் (80), தனிமையில் வாழ்ந்து வந்த தர்மராஜ் தான் பெற்ற மூன்று பிள்ளைகளும் தன்னை கண்டு கொள்ளாமல் இருந்ததால், தர்மராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கடந்த 12 -11- 2024 அன்று விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்ற தர்மராஜ் மதுபானத்தில் விஷம் கலந்து அருந்தியுள்ளார். இதனை அடுத்து,அக்கம் பக்கத்தினர் 108 வாகனம் மூலம் தர்மராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான மதித்தனர். சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ் சிகிச்சை பலனின்றி 14-11-2024  வியாழக்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.