விளாத்திகுளம் அருகே ரூ. 6.69-லட்சம் மதிப்பீட்டில் 63KVA- திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றி MLA இயக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சியில் ரூ. 6.69-லட்சம் மதிப்பீட்டில் 63KVA- திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
நிகழ்வில் சகர்பான் மேற்பார்வை பொறியாளர் மின்பகிர்மானம் குருசாமி, தூத்துக்குடி செயற்பொறியாளர் (பொறுப்பு) விநியோகம் முனியசாமி, கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர் விநியோகம் கயத்தார் அருண்குமார், இளமின்பொறியாளர் உட்பட மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.