விளாத்திகுளம்  அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த எதிரி கைது - 36 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூபாய் 41,800/- மற்றும் கார் பறிமுதல்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  அருகே உள்ள சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் நேற்று (13.05.2026) சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுங்குளம் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் அருகில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த கருத்தவேல் (33) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரி கருத்தவேலை கைது செய்து அவரிடமிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்கப் பணம் ரூபாய் 41,800/- மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.