விளாத்திகுளத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த கூட்டுறவு வார விழாவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மொத்தம் 157 நபர்களுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்த கூட்டுறவு வார விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா, துணைப் பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன், கூட்டுறவு சங்க செயலாளர்கள் நாகமணி, ஆறுமுகம், ராமச்சந்திரன்,திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன்,சின்ன மாரிமுத்து,மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
157 நபர்களுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குனர்!
அடுத்த
விவசாயிகளை கண்டுகொள்ளாத கனிமொழி எம்பி - விவசாயிகள் வேதனை...
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026