ஜமீன் கோடாங்கிபட்டியில் ரூ‌.5.50 லட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தில், முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்பதால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக்கேடாக இருப்பதால் பல்வேறு நோய்த்தொற்றுக்குள்ளாகி வருவதாகக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் விளாத்திகுளம் அதிமுக ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரனிடம் தங்களது கிராமத்தில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து (2024-2025) ரூ‌.5.50 லட்சம் ஒதுக்கீடு செய்து ஜமீன் கோடாங்கிபட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க இன்று பூமி பூஜை செய்து பணிகளை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி, கவுன்சிலர் தர்மராஜ், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.