குளத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அதிமுக கட்சியினர்!



தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 77-வது பிறந்தநாள் கொண்டாட்டம் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மற்றும் சிவகாமசுந்தரி மகேஷ் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த கடை வியாபாரிகள், பொதுமக்கள், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.