தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுகவினர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் க - சுப்பிரமணியபுரம் வணிக வளாகப் பகுதி மற்றும் வீடு வீடாக சென்று விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் ஏற்பாட்டில், வருகின்ற சட்டமன்ற பொது தேர்தல் 2026 அதிமுக அதிமுக கழக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தேர்தல் அறிக்கை குறித்தான துண்டுப் பிரச்சாரங்களை, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் இந்திய ஜனநாயக கூட்டணி கட்சியினர், வழங்கி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,பால்ராஜ், நகரசெயலாளர் மாரிமுத்து,அதிமுக நிர்வாகிகள் வரதராஜபெருமாள்,குட்லக் செல்வராஜ், வேல்முருகன், ஆசைத்தம்பி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த், மருதுபாண்டி, மகளிர் அணி சாந்தி, பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.