விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்!




தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழாவானது அதிமுக  கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், இராமச்சந்திரன், நகரச் செயலாளர் மாரிமுத்து  ஆகியோர் ஏற்பாட்டில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா-வின் 78-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு,தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், உட்பட அதிமுக கட்சியினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.