விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 77-வது பிறந்தநாள் விழா அஇஅதிமுகவினரால் தமிழகத்தின் பல பகுதிகளில் கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர்கள் மகேஷ்,பால்ராஜ்,நகர செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் தலைமையில் ஜெயலலிதா-வின் 77-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் முன்னிலையில் கட்சியினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோடு அங்கிருந்த பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில்,முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் N.K. பெருமாள்,அதிமுக நிர்வாகிகள் வரதராஜபெருமாள்,வேல்முருகன் ஆனந்த்,கண்ணன், ரவி நாயுடு,சண்முகசாமி, மகளிர் அணி வார்டு கவுன்சிலர் பிரியா, சாந்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.