17 வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கடமையாற்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு தலைவர்!



தமிழகத்தின் 17 வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமாபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வயது முதியவர்கள்,மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் தனது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெற்கு ஒன்றிய தலைவர் சிவகாமசுந்தரி தனது வாக்கினை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 209-வது  வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றினார்.