விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா 117- வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் ஏற்பாட்டில்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ்,முன்னிலையிலும் அதிமுகவினர் ஏராளமானோர் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் NKP பெருமாள் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி அண்ணா பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், விளாத்திகுளம் நகரச் செயலாளர் , மாரிமுத்து, வரதராஜ பெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்தகுமார்,மகளிர்அணி சாந்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.