விளாத்திகுளம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் ஆசிர்வாதம் பெற்ற அதிமுக வேட்பாளர்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக புதுமுகமாக களம் இறங்கிய சத்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து.
இன்று விளாத்திகுளம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இராமநாதனிடம், விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா சால்வை அணிவித்து ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இராமநாதன் அதிமுக வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.