விளாத்திகுளத்தில், காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சிவாஜி நற்பணி மன்றம் சார்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு "வேண்டாம்..வேண்டாம்...! மது வேண்டாம்.." என்ற வாசகங்களுடன் கூடிய நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி உற்சாகமாக கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அருகில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவர் அற்புதராஜ், நகர தலைவர் காமராஜ், மேற்கு வட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், சோனியா பேரவை சுப்ரமணியன், கிழக்கு வட்ட தலைவர் கணேஷ் குமார், நகர செயலாளர் ஞான ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"இப்ப காலம் ரொம்ப மோசமா கெட்டுப்போயிருக்குது.... ஆண், பெண் ,பசங்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்"அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்!
அடுத்த
16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு?
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026