விளாத்திகுளம் அருகே நகை திருட்டு வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் மெயின் பஜாரில் அரசு மருத்துவமனை எதிரே ஒரு நகைக்கடை நகைக்கடையில் 2018 ஆம் ஆண்டு 100 பவுன் கொள்ளை போனது இதில் அப்போது 7 நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டனர், போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை 3 பேரை கைது செய்தனர் 4 பேர் தப்பி ஓடினர், இந்நிலையில் மேலும் ஒரு குற்றவாளியை எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கண்ணன், உதவி ஆய்வாளர்,மாதவ ராஜா மற்றும் போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவகோட்டை தாலுகா திம்மலை சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாயவன் மகன் ஆறுமுகம் வயது (45 ) என்பவரை பிடித்து கைது செய்தனர், மேலும் 3 குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.