தவி நிறைவு விழாவில் "அசைவ விருந்து" வழங்கி அசத்திய விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன்!


தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி நிறைவு விழாவானது, அதிமுக ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் தங்களது ஊராட்சிக்கு செய்த சிறப்பான திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்து பாராட்டுக்கள் தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதைத்தொடர்ந்து பதவி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் "மாபெரும் அசைவ விருந்து" வழங்கி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...