விளாத்திகுளம் அருகே ரூ.13.94-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே.குமாரபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.94-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.