விளாத்திகுளம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் -  சிலுவைபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிதாசன் டேவிட் என்பவரின் மகன் ஜோஸ்வா ராகுல் (26), இவர் டிப்ளமோ முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மனவருத்தத்தில் இருந்து வந்த ஜோஸ்வா ராகுல்,இன்று  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய போலீசார் ஜோஸ்வா ராகுல் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.