எட்டயபுரத்தில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது லாரி ஏறி உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி இவரது மகன் விநாயகமூர்த்தி வயது (27) இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு எட்டயபுரம் வந்தவுடன் பைபாஸில் சாலையோர தடுப்பு சுவரில் உறங்கியுள்ளார், அதன் அருகே மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது, இந்நிலையில் இன்று அதிகாலையில் டேங்கர் லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமுருகன் (41) வண்டியை நகற்றும் பொழுது எதிர்பாராத விதமாக லாரி சக்கரத்தில் சிக்கி விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விநாயகமூர்த்தியின் உடலை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்கு அனுப்பிவைத்து,இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.