விளாத்திகுளத்தில் சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்தவர் குருசாமி இவரது மனைவி முனீஸ்வரி (63), இவர்கள் அப்பளம் வியாபாரம் செய்து வந்துள்ளனர், இந்நிலையில் வழக்கம் போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் அப்பளம் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலை தியேட்டர் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக காற்று வீசியதால் இருசக்கர வாகனத்தில் இருந்து குருசாமி மற்றும் முனீஸ்வரி ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர், இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முனீஸ்வரின் தலை இருசக்கர வாகனம் அருகே சென்ற லாரியின் சக்கரத்தில் மோதி காயம் அடைந்ததில், முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து முனீஸ்வரின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.