விளாத்திகுளம் அருகே அரசு பேருந்து மீது லோடுவேன் மோதி விபத்து!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனை பேருந்து இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி 5 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, பேருந்தை விளாத்திகுளத்தை சேர்ந்த ராஜாராம் (44), ஒட்டி வந்துள்ளார், அப்போது பேருந்து விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் -  முத்துக்குமராபுரம் விளக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானதில்,லோடு வேனை ஒட்டி வந்த ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆறைக்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கு காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், லோடு வேன் ஓட்டுநர் செல்வம் தூக்க கலக்கத்தில் வேலை பேருந்து மீது மோதி விபத்து ஏற்படுத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.