விளாத்திகுளம்
அருகே பொதுவெளியில் மது
அருந்திவிட்டு காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்,சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு,போலீசாரின் அன்பான விசாரணை மற்றும் அறிவுரையை
தொடர்ந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ!
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம்- நாவிலக்கம்பட்டி
சாலையில் பொது வழியில் சிலர் மது அருந்தி கொண்டிருப்பதாக எட்டையாபுரம் காவல்
நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றதும் சாலையில்
வாகனத்தை நிறுத்தி மது அருந்திக் கொண்டிருந்த சிலர் அங்கிருந்து வாகனத்தை
எடுத்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
மீதி இருந்த வாகனங்களை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல
முயன்ற போது அங்கு நின்றிருந்த ஒருவர் எப்படி இரு சக்கர வாகனத்தை எடுத்து
செல்லலாம்? குடித்துவிட்டு
வாகனத்தை ஓட்டவில்லை? வாகனத்தில்
அமர்ந்தான் இருந்தோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி
அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். மேலும் சலூன்
கடைக்கு வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் எடுத்து செல்வதாகவும், பாரதியார் பிறந்த மண்ணான எட்டையாபுரத்தில்
காவல்துறையினர் இப்படி நடந்து கொள்வதாக அந்த வீடியோவில் பேசிய நபர் அதனை சமூக
வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் எட்டையாபுரம் போலீசார் இது குறித்து விசாரணை
நடத்தினர். விசாரணையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த வீடியோவை
பதிவேற்றம் செய்தது சென்னையில் காய்கறி கடை வைத்திருக்கும் பொன்ராஜ் என்பது
தெரியவந்தது. எட்டையாபுரத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சாலைல இருந்து மது
அருந்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து தெரியவந்தது.
இதையடுத்து
போலீசார் பொன்ராஜ் மற்றும் அவரது உறவினர் அருண் என்ற ராஜா என்பவரை அழைத்து விசாரணை
நடத்தினர். விசாரணையின் போது தாங்கள் செய்தது தவறுதான் இனிமேல் இதுபோன்று செய்ய
மாட்டோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
அதுமட்டுமின்றி இருவரும் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோவும்
வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மது அருந்துவிட்டு தவறாக நடந்து கொண்டோம்
தற்போது சமாதானமாக செல்வதாக தெரிவித்துள்ளனர்.