விளாத்திகுளத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு விளாத்திகுளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் தூத்துக்குடி காசநோய் பிரிவு அலுவலர்கள் அவர்களால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காச நோயின் அறிகுறிகள் அதற்குண்டான சிகிச்சை வழிமுறைகளை மேற்கொள்ளும் முறை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டது . முகாமில் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்...