அனைத்து பள்ளிகளிலும் பாலியல் வன்முறையை தடுப்பதற்கு புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி மாநில ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை!
எட்டையாபுரத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பாக பெண் ஆசிரியர்களுக்கான சிறப்பு மாநில மாநாடு!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் பெண் ஆசிரியர்கள் சிறப்பு மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2000 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் வரவேற்பு பகுதியில் பழங்காலத்தில் பெண்கள் அன்றாட வீட்டில் பயன்படுத்தக்கூடிய பழங்காலத்து நெல்மணிகளை சேர்த்து வைக்கும் குலுக்கை, அரிவாள்மனை,முறம், குத்துப்பட்டி,ஓலைப்பட்டி,சமையல் உபகரணப் பொருள்கள்,செம்பு உலகத்திலான பாத்திரங்கள், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டப்பலகை, ஓலைச்சுவடு,மரக்கா, நாழி,அரைநாழி ஆழாக்கு, பழைய காலத்து கேமரா, வானொலிபெட்டி,டெலிபோன் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன, அதேபோல் இந்தியா முழுவதும் முதல் முதலில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்தலைவர் சாதித்த துறைகள் மற்றும் புகைப்படங்கள் விழிப்புணர்வுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன, விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு தலைவர் மணிமேகலை பேசியபோது...
பெண்ணாசிரியர்களுடைய பதவி உயர்வை பறிக்கக் கூடிய அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
பெண் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் பாலியல் வன்முறையை தடுப்பதற்காக புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.
அந்த புகார் கமிட்டிகள் அமைக்கப்பட்ட இடங்களில் அந்த புகார் கமிட்டிகள் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.
அதுமாதிரி பெண்ணாசிரியர்களுக்கு பள்ளிகளில் களிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும்.
பெருநகரங்களில் பெண்ணாசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் உழைக்கின்ற பெண்கள் அனைவருக்கும் மகளிர் விடுதி உள்ளிட்ட குழந்தைகள் காப்பகமும் அமைத்து தர வேண்டும் என்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் இன்றைக்கு தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம்.
அதேபோல இன்றைக்கு தமிழகத்தில் நாட்டில் இந்தியாவிலும் தமிழகத்திலும் பாலியல் வன்முறை என்பது குழந்தைகள் மீதான வன்முறை பெண்கள் மீதான வன்முறை என்பது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
இதனை தடுப்பதற்கு ஒரு தனி சட்டம் அமைக்க வேண்டும். இதில் இந்த பாலியல் வன்முறைகளில் ஈடுபடு அவர்கள் மீது கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அதுவும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று இன்றைக்கு பெண்ணாசிரியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அதேபோல இளைஞர்களை சீரளிக்கக்கூடிய போதை பொருள் கலாச்சாரம். இந்த போதை பொருளின் விளைவாக குடும்பமே சீரளிகின்ற நிலைக்கு ஏற்படுகின்றது. எனவே அதை தடுப்பதற்கான முயற்சிகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் பல்வேறு தீர்மானங்களை இன்றைக்கு இந்த மாநாட்டிலே நாங்கள் நிறைவேற்றி இருக்கின்றோம்.
இதனை அரசு உடனடியாக இதற்கான தீர்வுகளை காண வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு தலைவர் மணிமேகலை கூறினார்.