ஒரு அப்பனுக்கு பொறந்தவன் சீமானுக்கு தான் ஓட்டு போடுவான்: திமுக நிர்வாகிகள் விளாத்திகுளம் DSP யிடம் புகார் மனு!



வருகின்ற 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை நடைபெற உள்ள நிலையில்,தமிழக அரசியல் கட்சியினர் மாநாடு,பொதுக்கூட்டம் என தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் தகவல் தொழில்நுட்ப சார்பில் you tube சேனல் மூலமாக மக்களை சந்தித்து, அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு உங்கள் வாக்கு, யார் சிறந்த அரசியல் தலைவர், இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சியினரால் மக்களுக்கு என்ன பயன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக்கொண்டு வாக்கு வங்கி கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு  "தமிழும் அறமும்" என்ற பெயரில் மக்களிடம் நேர்காணல் வீடியோ எடுக்கப்பட்டது.


அதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் மேடைசேர்மன் என்பவரிடம்  நேர்காணல் நடத்திய போது, மேடை சேர்மன் என்பவர்  பேசுகையில் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் சீமானுக்கு தான் ஓட்டு போடுவான் என்றும், களவாங்கிறவன், பிள்ளைகள் மோசம் செய்பவன் மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுவான் என்ற அர்த்தத்தில் பேசியுள்ளார், அதேபோல் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் சாதியை சொல்லி அவர் நாடார் சாதி இல்லை என்றும், பேசி சாதி ரீதியான மதங்களை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பேசி பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தி உள்ள மேடை சேர்மன் மற்றும் நேர்காணல் எடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், மேற்படி சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றம் செய்ய தடை செய்தும் எதிர்வரும் காலங்களில் இது மாதிரியான செய்திகள் படம் பிடிப்பதை சட்டரீதியாக தடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பேரூர் கழக திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் ஏராளமான திமுகவினர் விளாத்திகுளம் DSP அசோகனிடம் மனு அளித்தனர்.