வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் : எட்டையாபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்!




எட்டையாபுரத்தில் தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் இணைந்து எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது சத்யா பேசுகையில்  எட்டயபுரத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது, மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.




எட்டையாபுரம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.




எட்டையாபுரம் அதன் சுற்றியுள்ள கிராம மக்களின் வசதிக்கேற்ப  எட்டையாபுரம் தனி ஊராட்சி ஒன்றியமாக அமைக்கப்படும்.



எட்டையாபுரத்தில் உள்ள அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு திமுக பேரூராட்சி மன்ற தலைவர் பாரபட்சமாக நடந்து கொண்டு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டையும் சத்யா முன்வைத்தார். 




இந்நிகழ்வில் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார்,பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ராம்கி,ஆத்திராஜ், கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி,OSR ரகுபதி,புரட்சி பாரத கட்சியின் ஒன்றிய செயலாளர் லெனின் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.