- விளாத்திகுளம் அருகே ரூபாய் 28.25 லட்சம் மதிப்பீட்டில்,கட்டி முடிக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடம்!
- பள்ளிக்குழந்தைகளின் உயிரைப்பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை...
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் கிராமத்தில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (CFSIDS) 2022-2023 ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளிக்கான இரண்டு கூடுதல் வகுப்பறை ரூபாய் 28.25 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2023 -ம் கட்டி முடிக்கப்பட்டு பள்ளி திறக்கப்பட்டன.
- இப்பள்ளியில் தற்போது 5 குழந்தைகள் பயின்று வருகின்றனர், இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட 3 ஆண்டுகளிலே பள்ளியின் கைப்பிடி சுவர், தரை,ஆசிரியர் இருக்கை பின்புறம், மேற்கூரை என பள்ளி கட்டிடம் முழுவதுமே பழுதடைந்துள்ளது.
- தற்போது பருவமழைக்காலம் ஆரம்பமான நிலையில், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் அதேபோல் தரமற்ற முறையில் பள்ளி கட்டிடங்களை கட்டிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதேபோல் இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள கட்டிடங்களை பள்ளி கல்வித்துறையை சேர்ந்த எந்த அதிகாரிகளும் ஆய்வு செய்து முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Vilathikulam
கட்டி முடிக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக வெற்றி கழகம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102-வது பிறந்த நாள் விழா!
அடுத்த
“ கொட்டும் மழையையும் ” பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026