தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரம்-புங்கவர் நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் மற்றும் சுடலைமாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு  ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருக்கும் புங்கவர் நத்தம் கிராம மக்கள் எங்கிருந்தாலும் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக முன்படுக்கையின் மீது ஏறி அமர்ந்து அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பொதுவாக பல்வேறு கோவில்களில் அருவாள் மேல் ஏறி குறி சொல்வது, அக்கினி குண்டத்துக்குள் நின்று குறி சொல்வது, கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு குறி சொல்வது உள்ளிட்ட பல்வேறு பூசாரிகள் அருள்வாக்கு கூறினாலும்இந்த புங்கவர்நத்தம் கிராமத்தில் பூசாரி ஜெயபாலை மேளதாளம் முழங்க  பக்தர்கள் அழைத்து வந்து 10 அடி அகலம் 6 அடி உயரம் கொண்ட முள் படுக்கையின் மீது ஏறி அமர்ந்தும், ஆடியபடியும் அருள்வாக்கு கூறும் பூசாரி ஜெயபாலிடம் பக்தர்கள் அருள்வாக்கு கேட்பதும், அவர் கூறுவது அப்படியே பலிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முக்கிய நிகழ்வு முல்படுகை ஏறி குறி சொல்லும் நிகழ்வைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும்  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.