விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை ஊழியர் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன்  கருப்பசாமி (45), இவரது  கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவரின் கோழிப்பண்ணையில் கருப்பசாமி ஊழியராக வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கருப்பசாமி மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.