விளாத்திகுளம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் இன்று (13.05.2026) எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (51) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து அவரிடமிருந்த 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.