விளாத்திகுளம் அருகே ரூ.20-லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டிடம்! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உருளைகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20-லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.