விளாத்திகுளம் அருகே ரூ.9.77-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை திறப்பு! 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ,கே.தங்கம்மாள்புரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.77-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல்,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.