விளாத்திகுளம் அருகே ரூபாய் 21.80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சியில்,கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்கியுள்ள இடத்தில் ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.21.80- லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.