விளாத்திகுளம் அருகே ரூ. 16.55-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடிமையக் கட்டிடம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  கீழமுடிமன்  கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 16.55-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிமையக் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார். உடன் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.