வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி அன்று தமிழக மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,வருவாய்துறை சார்பில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, அதேபோல் காவல்துறை சார்பில் தேர்தல் கொடி அணிவகுப்பு பேரணி உள்ளிட்டவை, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தில் மக்களவை பொது தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது இந்த பேரணியின் போது, அனைவரும் வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, 18 க்கு வயது மேற்பட்டோர் அனைவரும் தங்களது வாக்கு செலுத்த வேண்டும்,100% வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது, இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.