தூத்துக்குடியில் விஜய் ரசிகர்கள்  ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்!     தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற ஆலோசகர் முத்துராஜ் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி 59வது பகுதியில் உள்ள அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி  சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்  என ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். திமுகவில் இணைந்த அவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.