விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி  செலுத்திய ஏராளமான பக்தர்கள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ வடக்குத்தி அம்மன், ஸ்ரீ முனியசாமி,ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்களின் பால்குடங்களுக்கு,வைப்பாற்றில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்த பின் நையாண்டி மேளத்துடன் வைப்பாற்றில் இருந்து பக்தி பரவசத்துடன் கிளம்பிய பக்தர்களின் பால்குட ஊர்வலம், கிராமத்தில் உள்ள இதர தெய்வங்கள் கோவிலுக்கு சென்று ஊர்வலமாக வந்தவுடன், ஊர்வலமாக கொண்டு வந்த பால்குடங்களை வைத்து அம்மனுக்கு பல அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து இளநீர்,பன்னீர்,சந்தன,மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியப்பொருட்களால் சிறப்பாக அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாரணை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மட்டுமல்லாது இக்கிராமத்தைச்சேர்ந்த தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் திருவிழாக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத்தொடர்ந்து நாளை அம்மனின் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும் என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் ஊர் தர்மகத்தா T.விஜயகுமார். ஊர் கணக்கு பிள்ளை செல்வம் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.