விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆடுகளுடன் உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் மகாலட்சுமி காலனி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் அர்ஜுனன் (38), இவர் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று மதியம் குளக்கட்டான்குறிச்சிபகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அர்ஜுனன் மற்றும் அவர் உடன் இருந்த இரண்டு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.


இதனை அடுத்து தகவல் அறிந்த புதூர் காவல் நிலைய போலீசார் அர்ஜுனனின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.