தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஏற்பாட்டில் விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, சின்னமாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம், சிவகங்கை,தேனி, புதுக்கோட்டை,கம்பம்உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன, போட்டியானது விளாத்திகுளம் மதுரை சாலையில் நடைபெற்றது, பூஞ்சிட்டு பந்தயத்திற்கு 10 கிலோமீட்டர் தூரமும், சின்ன மாட்டிற்கு 14 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழாகமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது, போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நிகழ்வில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.