விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த தவெக மகளிர் நிர்வாகி!




முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட தவெக பெண் நிர்வாகிக்கு, ஆன்மீகவாதிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் கடும் கண்டனம்!  




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தில் சித்திரைதேர் திருவிழா,சஷ்டி, ஆடிப்பூரம், ஐயப்பன் மண்டல பூஜை,பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இக்கோவிலில் நடைபெறுவது வழக்கம்.




இந்த நிலையில் விளாத்திகுளம் தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகியான தேவி என்பவர், விளாத்திகுளத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்,இவர் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் யாரும் இக்கோவிலில் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம் வீடியோ எடுக்க கூடாது  என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தமிழக வெற்றிகழக பெண் நிர்வாகியான தேவி கையில் தேங்காய்,பழ கூடையோடு, கோவில் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று,ஏதோ அவருக்கு மட்டுமே பக்தி இருப்பது போலவும், மீனாட்சி அம்மன் கோவிலை தனது குடும்ப  வம்சாவளிகள் கட்டியது போலவும் கோவிலை சுற்றி சுற்றி ரில்ஸ் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




இந்த ரில்ஸ் வீடியோ விளாத்திகுளம் பகுதியில் தற்போது வைரலாக பரவிய நிலையில், தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகி தேவிக்கு ஆன்மீகவாதிகளும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.



இந்த வீடியோ சர்ச்சையை வைரலான நிலையில் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய செயல் அலுவலர் உமா மகேஸ்வரி,தேவி மீது விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் யாரும் ரிலீஸ் வீடியோ எடுக்கக் கூடாது,அப்படி எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகியே கோவில் வளாகத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளார்.