விளாத்திகுளம் அருகே ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம் ; தாழ்வாக தொங்கும் மின் வயர்கள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை -  பாண்டியாபுரத்திலிருந்து கல்மேடு சாலையில் உள்ள மூன்று மின்கம்பங்களில் ஒன்று சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்தும், ஆபத்தான நிலையில் வளைந்த நிலையில் உள்ளது, அதேபோல் மற்ற இரு மின் கம்பங்களுக்கு இடையே உள்ள மின் வயர்கள் கை தொடும் தூரத்தில்  தாழ்வான நிலையில் தொங்குவதால், விபத்து ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது, இது குறித்த அப்பகுதியினர் பலமுறை குளத்தூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், எனவே விரைந்து பெயர்ந்த மின்கம்பங்களை சரி செய்து தாழ்வாக தொங்கும் மின் வயர்களையும்  சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.