தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியை சரியாக நடத்துவது குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தூத்துக்குடி, திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம் கோவில்பட்டி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணம் மையமான தூத்துக்குடியில் உள்ள வ. உ. சி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு இன்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது
முதலில் தபால் வாக்குகள் என்ன பட வேண்டும் அதே நேரத்தில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு அதற்காக போடப்பட்டுள்ள மேஜைகளில் வாக்குகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் எண்ண வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் எண்ண வேண்டும்.
அனைத்து மேஜைகளின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு தேர்தல் பார்வையாளர்கள் ஒப்புதல் பெற்ற பிறகு முடிவுகள் அறிவிக்க வேண்டும்.
வாக்கு என்னும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும். முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதிக்க கூடாது.
வாக்கு என்னும் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதி அட்டை வழங்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்க கூடாது. காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.