விளாத்திகுளம் அருகே 40-மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எப்போதும்வென்றானில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி,சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு 40-மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசத்துடன் கூடிய இருசக்கர வாகனத்தின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.