எட்டையபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து பற்றி எரிந்ததால் பரபரப்பு!




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ. உ. சி நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பாலாஜி. இவர் தனது காரில் உறவினர்களுடன் மதுரையில் உள்ள பாண்டி கோவிலுக்கு சென்று விட்டு எட்டையாபுரம் வழியாக கோவில்பட்டிக்கு வந்துள்ளார். 





எட்டையாபுரம் - குமாரகிரி இடையே கார் வந்து கொண்டிருக்கும் போது காரில் இருந்து அதிகமாக புகை எழுவதே பார்த்த பாலாஜி தனது காரை ஓரமாக நிறுத்தினர். காரில் இருந்தவர்களும் காரை விட்டு இறங்கி தள்ளி சென்றனர். இதனை தொடர்ந்து சில நொடிகளில் கார் தீப்பிடித்து பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது உள்ளது. இதையெடுத்து பாலாஜி எட்டையாபுரம் போலீசார் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையில் பயந்து வந்து பற்றி எரிந்து கொண்டிருந்த காரில் தீயை அணைத்தனர். 





இருந்தபோதிலும் கார் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. புகை எழுந்ததும் பாலாஜி கார நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எட்டையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.