தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் பாஸ்கர்வேல் (14), இவர் பூதலாபுரம் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் ஊரில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்ற பாஸ்கர்வேல் அதிக ஆழப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கிராம மக்கள் நீண்ட தேடுதலுக்கு பின் நீரில்மூழ்கி இருந்த பாஸ்கர்வேல் உடலை மீட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் பாஸ்கர்வேல் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரம்ஜான் பண்டிகை ஆடு விற்பனைகள் குறைந்து காணப்பட்டது!
அடுத்த
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்கண்டயேன் ஆலோசனை.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026