விளாத்திகுளம் அருகே கோவிலின் உண்டியலை  உடைத்து ரூ,40,000 பணம் திருட்டு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சுடலைமாடன் கோவிலில் 31-01-2025 வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் கோவிலில் சுவற்றில் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த ரூ,40,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 (மேலும் இந்த கோவிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவதும் இரவில் கோவிலில் விளக்குகள் பொருத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.)