விளாத்திகுளம் அருகே ஒரிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,400 கிலோ பீடிஇலைகள் பறிமுதல்: 9 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர்-தளவாய்புரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் ஒரிசாவில் இருந்து பீடிஇலைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாகவும் அதே போல் அரசு முத்திரை உடைய யூரியா உரத்தை, சாக்கு பைகளில் மாற்றி சட்ட விரோதமாக விற்பனை நடைபெறுவதாகவும் வந்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு வேளாண்மை துறை ஓட்டப்பிடாரம் உர வட்ட ஆய்வாளர் சிவகாமி தலைமையிலான வேளாண்மை துறையினர் மற்றும் காவல் துறையினர், தளவாய்புரத்தில் உள்ள குடோனுக்கு சென்ற சோதனை செய்தபோது, குடோனில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் மற்றும் யூரியா உரத்தை லாரியில் ஏற்ற முயன்ற போது, லாரியை சுற்றி வளைத்தனர்.
இதனை அடுத்து உரம் மற்றும் பீடி இலைகளை பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தேவமணி மகன் கார்த்திக் (39), திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சம்சுதீன் மகன் சையத் அலி (35), சரவணகுமார் அரவிந்த் (22), தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து மகன் முருகேசன் (43), தூத்துக்குடி மேலூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி கார்த்திக் (27), கசாலி மகன் அப்துல் ரகுமான் (24), அந்தோணிசாமி மகன் கனிராஜ் (42), ஆகிய 9 பேரையும் குளத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்கள் பதித்து வைத்திருந்த ரூபாய் இருவது லட்சம் மதிப்பிலான 2,400 பீடி இலைகளை மற்றும் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 14,400 கிலோ யூரியா உர மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி,கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஒரிசாவில் இருந்து பீடிஇலைகளை குறைந்த விலையில் வாங்கி தமிழக மற்றும் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.