தூத்துக்குடியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.
தூத்துக்குடி சாமுவேல்புரத்தைச் சேர்ந்தவர் பிரம்மநாயகம் (45), இவர் கிருஷ்ணராஜபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழிமறித்து ரூ,10000 மதிப்பிலான செல்போனைப் பற்றி சென்றுள்ளனர். இதுகுறித்து பிரம்மநாயகம் அளித்த புகாரின் பேரில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அந்தோணி ஜேசுராஜ்(27) மற்றும் ஜோஸ்வா (19) ஆகிய இருவரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த இருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.